Saturday, November 29, 2008

Mumbai Terror!

Mumbai Terror on 26th November, 2008 was covered by all medias! Tamil magazine ஜூனியர் விகடன் (Junior Vikatan) posted an article about the Mumbai Terror (பாகிஸ்தான் கனெக்ஷன்). There were few comments from two people turned this terror as Hindu - Muslim clash. This article turned to be in Tamil, so here is my stand: Think beyond religion and country, so you will be a human!

The following are the comments from them,

Person1:
பாதுகாப்பு நடவடிக்கையில் ஹேமந்த் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி? அவர் முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார் அப்படி இருக்க முஸ்லிம் தீவிரவாதிகள் எப்படி கொள்வார்கள்

இது பி ஜே பி இன் செயல் ஆனால் மீடியா குழப்பம் உண்டு பண்ணுகிறது

Person2:
வீர மரணம் எய்திய திரு. கார்கரேயை கொல்ல தீவிரவாதிகளால் முடியாது... எனக்கென்னமோ கூடவே இருந்து குழி பறித்த கதையாக தான் தெரிகிறது... புல்லட் புரூஃப் சகிதம் போனவரை அந்த புல்லட் புரூஃப் உடையை தாண்டி எந்த ஒரு தீவிரவாதிகளாலும் சுட முடியாது என்பது சாதாரண முட்டாள் கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்... மாலேகான் விவகாரத்தை நோண்டி எடுத்ததில் கில்லாடியான இந்த அஞ்சாநெஞ்சரை கூடவே இருந்த தேச துரோகியால் மட்டுமே கொல்ல முடியும். இதெல்லாம் இந்து தீவிரவாத அமைப்பு நடத்தும் நாடகமே அல்லாமல் சும்மா சும்மா பாகிஷ்தான், புண்ணாக்கு என்று குற்றம் சுமத்தி நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி இருப்பதாகவே தோன்றுகிறது... புனித மக்கா சென்று வர தயாராக இருந்த "ஹாஜிகள்" 25 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதிலிருந்து இதை எந்த ஒரு முஸ்லிம் தீவிர?வாத அமைப்பும் செய்திருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகிறது... சரியான முறையில் மதிப்பிற்குரிய கார்கரேயை போல வேறு நல்ல அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால் மட்டுமே உண்மை விபரம் வெளிவர வாய்ப்பு உள்ளது... இல்லையேல் கிருஷ்ணா கமிஷன் குஜராத் சட்டமன்றத்தின் "குப்பை தொட்டி"க்குள் போன கதை தான் இதற்கும் ஏற்படும்..... அப்பவிகளைக் கொன்று ஆட்சி அதிகார பீடத்தை கைப்பற்ற நினைக்கும் இது போன்ற தேச துரோக கட்சிகளை பின்னுக்கு தள்ளி வரும் தேர்தலில் மக்கள் நல்ல தீப்பு வழங்குவார்கள் என்று வேண்டுவோம் இறைவனை,....

My response:
எனக்கு இந்த article எந்த மதத்தையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதாகப் படவில்லை. நடந்திருக்கும் கொடூரம், முஸ்லீம்கள் ஹிந்துக்களை மட்டும் கொல்ல செய்த முயற்சியும் அல்ல. ஆனாலும், பல வாசகர்கள் இதை ஹிந்து-முஸ்லீம் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இதற்கு முக்கியமானவை ____, _____ ஆகியோரின் வாசகங்கள்.

//Person1: ...அவர் (கார்கரே) முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார் அப்படி இருக்க முஸ்லிம் தீவிரவாதிகள் எப்படி கொள்வார்கள். .... இது பி ஜே பி இன் செயல் ஆனால் மீடியா குழப்பம் உண்டு பண்ணுகிறது//
//Person2: ... இதெல்லாம் இந்து தீவிரவாத அமைப்பு நடத்தும் நாடகமே அல்லாமல் சும்மா சும்மா பாகிஷ்தான், புண்ணாக்கு என்று குற்றம் சுமத்தி நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி இருப்பதாகவே தோன்றுகிறது... அப்பவிகளைக் கொன்று ஆட்சி அதிகார பீடத்தை கைப்பற்ற நினைக்கும் இது போன்ற தேச துரோக கட்சிகளை பின்னுக்கு தள்ளி வரும் தேர்தலில் மக்கள் நல்ல தீப்பு வழங்குவார்கள் என்று வேண்டுவோம் இறைவனை,....//

இந்த வாசகங்கள் மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து மும்பை தீவிரவாத கொடூரத்தை பார்ப்பதையே காட்டுகிறது. அதாவது, நடந்த கொடூரம் ஏதாயினும், முஸ்லீம் தீவிரவாதிகளோ அல்லது முஸ்லீம் மதம் சார்ந்த நாடோ, அவர்கள் தப்பே செய்திருந்தாலும், குற்றமற்றவர்கள் என்று வீண் பிடிவாதத்துடன் வாதிடும் வாசகங்கள். இது இவர்கள் சார்ந்த இஸ்லாம் மதத்தின் மீது இவர்கள் வைத்திருக்கும் பற்று.

இந்த குறுகிய மதம் என்ற வட்டத்தைவிட நாடு என்ற வட்டம் சற்றே பெரியது. Flickr.com-ல் (http://www.flickr.com/photos/questman/3064807635/) ஒரு பாகிஸ்தனியர் "Stop blaming Pakistan for Mumbai terror attacks becuase Pakistan is fighting against terrorists more than anyone" என்று முழங்குகிறார். இது அவரின் நாட்டுப் பற்று. இப்படிப்பட்ட நாட்டுப் பற்றுடன் இவர்கள் மும்பை கொடூரத்தைப் பார்த்தால், "மும்பையின் அப்பாவி மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்ற வெளி நாட்டுத் தீவிரவாத கும்பல் பாகிஸ்தான் என்ற அண்டை நாட்டைச் சார்ந்ததாக என் தாய்நாட்டின் உளவுத்துறை சந்தேகப்படுகிறது" என்றவாறு மதசார்பற்ற வார்த்தைகள் இவர்களிடம் இருந்து வெளிவந்திருக்கும்.

இதைவிட ஒரு படி மேலே போய், சாதி, மத, இன, மொழி, நாடு தாண்டி சக மனிதரிடத்தில் பற்றிருந்தால் "உலகெங்கும் தாக்குதல் நடத்தி பல மக்களின் உயிர்களைச் சூரையாடும் தீவிரவாதம் ஒழிய வேண்டும்" என்றவாறு மனித நேயத்துடன் வார்த்தைகள் அமைந்திருக்கும்.

மதப் பற்று, நாட்டுப் பற்று, மானுடப் பற்று என எதில் இவர்கள் விருப்பம் என்பது இவர்களின் மனத் தெளிவைப் பொறுத்ததே!

மேலும், இவர்களின் வாசகங்களின் விளைவுகளுக்கும் தீவிரவாதத்திற்கும் ஏதும் வேறுபாடிருப்பதாக எனக்குப் படவில்லை. தீவிரவாதம் என்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. பிடிபட்ட தீவிரவாதி Qasab, 500க்கும் மேற்பட்ட மக்களை கொன்றதில் தனக்கு எந்த மன வருத்தமும் இல்லை எனக் கூறியிருக்கிறான். இதன் மூல காரணம் அவனுக்குப் பல வருடங்களாக அவன் மனதில் ஊட்டப்பட்ட வெறி. இப்படிப்பட்ட வெறியைத்தான் ____, _____ ஆகியோரின் வாசகங்களும் மற்ற வாசகர்களுக்கு ஊட்டியிருக்கின்றன.

கொலை செய்பவனை விட, கொலை செய்யத் தூண்டுபவன் மிகவும் ஆபத்தானவன். எனவே, இனிமேலும் இப்படிப்பட்ட வெறி தூண்டும் வார்த்தைகளைக் கூறி தங்களையோ தன் மதம் சார்ந்தவர்களையோ, இவர்கள் இழிவு படுத்த மாட்டார்கள் என்று நம்புவோமாக!

3 comments:

Gokula Krishnan said...

Its really a sensitive topic.

Mostly, the lives of their own country people is valued more than the lives of the foriegn nationals. Humanity does have the bigger circle than any other, but now a days, "Patriotic humanity" comes first.

I liked the core advice of your post, but it would have been better if some comments are mentioned from the users of Junior vikatan who speaks for relegion other than Islam.

I my view, you could have avoided the name of the persons (From Junior Vikatan).

Udayabaskar said...

Gokul,

It makes sense. I removed the names! :)

Thanks,

-- Baskar

Bala Krishnan said...

Good one. I enjoyed your reading. Keep writing.

Bala